கொரோனா வைரஸ் ஒருவரின் உடலில் எத்தனை நாட்கள் இருக்கும்? சீன மருத்துவர்கள் வெளியிட்ட புதிய தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
732Shares

கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வரும் நிலையில், அதன் தாக்கம் மற்றும் வீரியம் குறித்து சீன மருத்துவர்கள் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

உலகையே அச்சுறுத்தும் தொற்று நோயாக கொரோனா வைரஸ் உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் அதன் பாதிப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

நாளுக்கு நாள் வேகமாக பரவி வரும், இந்த நோயை கட்டுப்படுத்த முடியாமல் இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகள் திணறி வருகின்றனர்.

இந்நிலையில்,கொரோனா வைரஸ் ஒருவரது உடலில் தாக்கினால், அந்த வைரஸ் அவரது உடலில் எத்தனை நாட்கள் வரை இருக்கும் என்பது குறித்து சீன மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதில், ஒருவரை கொரோனா பாதித்தால் அவரிடம் குறைந்தபட்சம் 37 நாட்கள் அது வீரியத்துடன் இருக்கும் என்றும் 20 நாட்களுக்கு பிறகுதான் அதன் அறிகுறி தெரிய வரும் என்று மருத்துவர்கள் கூறுயுள்ளனர்.

கொரோனா அறிகுறிகள் தெரிந்த பிறகு 20 நாட்கள் கவனமாக இருக்கவேண்டும், அந்த பாதிப்பில் இருந்து மீண்டுவர சில வாரங்கள் ஆகும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமாகிய பிறகும் ஓரிரு நாட்களுக்கு அந்த வைரஸின் தாக்கம் உடலில் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்