கொரோனா அச்சத்தால் அவரசர நிலை பிரகடனம்! நாட்டின் அனைத்து கல்வி நிறுவனங்கள், எல்லைகள் மூடல்

Report Print Basu in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆசிய நாடானா ஆர்மீனியாவில் ஒரு மாதத்திற்கு அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 157 நாடுகளுக்கு பரவியுள்ளது. பல நாடுகளில் பள்ளிகள், வணிக வளாகங்கள் மற்றும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தும் ரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல நாடுகள், மாகாணங்கள் மற்றும் நகரங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அந்ந வரிசையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஆர்மீனிய அரசாங்கம் மார்ச் 16 முதல் ஏப்ரல் 16 வரை அவசரகால நிலையை அறிவித்தது.

ஆர்மீனியாவில் இதுவரை 30 கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. ஒருவர் குணமடைந்துள்ளார், மேலும் 300க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

நாட்டின் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன, அதே நேரத்தில் அண்டை நாடான ஜார்ஜியா மற்றும் ஈரானுடனான எல்லைகளும் மூடப்பட்டுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்