கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக வெளிநாட்டினர் நுழைவதற்கு தடைவிதித்த ரஷ்யா

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக மே மாதம் வரை வெளிநாட்டினர் நுழைவதற்கு ரஷ்யா தடை விதித்துள்ளது.

COVID-19 பரவுவதைத் தடுக்க வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் நுழைவதை தற்காலிகமாக கட்டுப்படுத்த ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விதிகள் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்து மே 1 வரை நீடிக்கும் என ரஷ்ய அரசு பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அண்டை மாநிலங்களின் தலைவர்களுக்கு இந்த நடவடிக்கை குறித்து விளக்க, பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் தொடர்ச்சியான தொலைபேசி உரையாடல்களை நடத்தியதாக அரசாங்கத்தின் பத்திரிகை சேவை தெரிவித்துள்ளது.

சூழ்நிலைகளின் விளைவாக உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளுக்கு இணங்கியே ரஷ்யா இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அவை தற்காலிகமானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தூதர்கள் மற்றும் "ரஷ்யாவில் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கு" விதிவிலக்குகள் வழங்கப்படும், மேலும் விமானக் குழுக்கள் போன்ற வேறு சில வகையினர், சர்வதேச லாரி ஓட்டுநர்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளும் நபர்களுக்கும் விலக்கு அளிக்கப்படும்.

மார்ச் 16 மாலை நிலவரப்படி, ரஷ்யாவில், COVID-19 நோயால் கண்டறியப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 93 பேரை எட்டியுள்ளது. அதே நேரத்தில் இதுவரை எந்த மரணமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்