தேவாலயத்தில் தீர்த்தம் குடித்த 46 பேருக்கு கொரோனா வைரஸ்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

தென் கொரியாவில் உள்ள தேவாலயம் ஒன்றில் தீர்த்தம் குடித்த 46 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் சியோலுக்கு அருகிலுள்ள சியோங்நாமில் உள்ள ரிவர் ஆப் கிரேஸ் கம்யூனிட்டி சர்ச்சில், கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த ஜெப கூட்டத்தில் சுத்தம் செய்யப்படாத பாட்டிலை வைத்து தீர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் ஆலயத்திற்கு சென்ற போதகர் மற்றும் அவரது மனைவி உட்பட 6 பேர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 6 பேருக்கும் கொரோனா வைரஸ் தாக்குல் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து தேவாலயத்தின் உறுப்பினர்கள் 135 பேருக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் சுமார் 46 பேர் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் கிம் என்று அடையாளம் காணப்பட்ட அந்த போதகர், தேவாலய உறுப்பினர்களுக்கு பெருமளவில் தொற்று ஏற்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

மேலதிக்க தகவல்களுக்கு

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்