பல மில்லியன் மக்களுக்கு சிக்கல்... முதன்முறையாக மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்த அரசு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

அரசு விடுத்துள்ள சுகாதார வழிகாட்டுதலை பின்பற்ற தவறினால் நாட்டில் பல மில்லியன் மக்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்காகி மரணமடைய நேரும் என ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தின் பேரில் மூடப்பட்டிருந்த இரண்டு பெரிய ஆலயங்களின் முற்றங்களுக்குள் ஷியைட் விசுவாசிகள் நுழைந்ததைத் தொடர்ந்து மருத்துவராக இருக்கும் மாநில தொலைக்காட்சி பத்திரிகையாளர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து ஈரான் அரசு அரசியல் கைதிகள் உட்பட 85,000 கைதிகளை தற்காலிகமாக விடுவித்துள்ளது.

ஈரானில் ஒரே நாளில் சுமார் 135 பேர் கொரோனா பாதிப்புக்கு பலியானார்கள். நாட்டில் கொரோனா பாதிப்புக்கு இதுவரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை இத்துடன் 988 என அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 1,178 பேர் புதிதாக இலக்காகியுள்ளதை அடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16,169 என அதிகரித்துள்ளது.

பொதுவாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஈரான் அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வரும் நிலையில்,

ஐக்கிய நாடுகள் மன்றமும், ஈரானில் உள்ள கைதிகள் தொடர்பில் தங்கள் கவலையை வெளிப்படுத்தி வந்தது.

மட்டுமின்றி பல ஆயிரங்கள் கூடும் தொழுகை கூடங்களை மூடுவதில் கடுமையான மெத்தனம் காட்டி வந்தது.

தற்போது மூடப்பட்டிருந்த அந்த இரண்டு பெரிய ஆலயங்களின் முற்றங்களுக்குள் விசுவாசிகள் நுழைந்ததைத் தொடர்ந்து பத்திரிகையாளரும் மருத்துவருமான அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்