கொரோனா: கண்ணக்கு தெரியாத வைரசால் முடங்கிய உலகம்! அதிக மக்கள் கூடும் இடங்களின் தற்போதைய நிலை? புகைப்படங்கள்

Report Print Abisha in ஏனைய நாடுகள்

ஆட்டி படைக்கு கொரோனா வைரசின் கோரத்தாண்டவத்தால், உலகமே கதிகலக்கிபோய் உள்ளது.

உலகம் முழுவதும் பல நாடுகள் முடங்கியுள்ளது. பங்குசந்தைகள் அகலபாதாளத்திற்கு செல்லும் அளவு சரிவை சந்தித்துள்ளது.

அந்த அளவு உலகம் முழுவதையும் பாதித்த கொரோனா வைரசால், உலகம் முழுவதிலும் அதிகம் மக்கள் கூடும் இடங்களில் தற்போது, ஒரு ஈ, காக்கா கூட இல்லாத அளவிற்கு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றது. இந்த நிலையை விளக்கும் வகையில் உலகின் பலமுக்கிய பகுதிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் பாங்காக்.(LILLIAN SUWANRUMPHA / AFP)
லண்டனில் உள்ள மிலினியம் பாலம் இது. கூட்ட நெரிசல் பொதுவாக அதிகம் காணப்படும் இடம் தற்போது கொரோனா தொற்று அச்சத்தால் வெறிச்சோடி இருக்கிறது.(படம்: HANNAH MCKAY / REUTERS)
பிரான்ஸின் நீஸ் நகரத்தில் உள்ள நதிக்கரை ஆள்நடமாட்டம் இல்லாமல் இருக்கும் காட்சி. கொரோனா தொற்று காரணமாக அந்நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. (VALERY HACHE / GETTY)
எப்போதும் சுற்றுலா பயணிகளால் நிறைந்திருக்கும் துபாய் கடற்கரை வெறிச்சோடி இருக்கிறது. கொரோனாவால் சுற்றுலா பயணிகளுக்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.(MAHMOUD KHALED / EPA)
இத்தாலியின் மிலன் நகரத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாலயம் வெறிச்சோடி காணப்படுகிறது.(DANIEL DAL ZENNARO / EPA)
மக்கள் கூட்டமாக கூடுவது தடை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் கல்லறை காலியாக இருக்கிறது.(ADNAN ABIDI / REUTERS)
வெறிச்சோடி காணப்படும் சாலைகள். இடம்: வெனீசுவேலா (MIGUEL GUTIERREZ / EPA)
நியூயார்க் நகரத்தில் பள்ளி, கல்லூரிகள், மற்றும் முக்கிய இடங்கள் மூடப்பட்டுள்ளன. (JEENAH MOON / REUTERS)
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் அருகில் உள்ள அல்கெலா டி ஹெனரஸ் நகரத்தில் உள்ள சாலைகளில் ராணுவத்தினர் கண்காணிப்பில் உள்ளனர். அங்கு மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. (FERNANDO VILLAR / EPA)
ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் 5 பேருக்கு மேல் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. (HELMUT FOHRINGER / AFP)
மருத்துவ அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது லெபனான். (ALI HASHISHO / REUTERS)

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்