கொரோனா தொடங்கியதிலிருந்து 8 நாட்களில் நிலைமை மோசமடையும்:விஞ்ஞானிகள் தகவல்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

கொரோனா குறித்து ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள், அதன் படிப்படியான தாக்குதல் நிலை குறித்து கூறியுள்ளனர்.

உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்க கூடிய COVID-19 கொரோனா வைரஸ் பற்றி ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள், அதன் முன்னேற்ற குறித்து முழுமையாக விவரிக்கின்றனர்.

காய்ச்சல் மற்றும் சோர்வு ஆகிய அறிகுறிகளுடன் ஆரம்பிக்கும் இந்த வைரஸ் தாக்குதலானது மூச்சுத் திணறல் வரை செல்லக்கூடும் என அவர்கள் கூறுகின்றனர்.

டிசம்பர் 29, 2019 க்குப் பிறகு ஜின்யின்டன் மருத்துவமனை மற்றும் வுஹான் நுரையீரல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட COVID-19 நோயாளிகள் மற்றும் ஜனவரி 31, 2020 க்குள் வெளியேற்றப்பட்ட அல்லது இறந்தவர்களை வைத்து அவர்கள் ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.

COVID-19 இன் ஆரம்ப அறிகுறியாக காய்ச்சல் சுமார் 12 நாட்கள் வரை இருக்கும். ஆனால் இருமல் நீண்ட காலம் நீடிக்கும் என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

அவர்கள் பரிசோதித்த 191 நோயாளிகளில் 45 சதவீதம் பேருக்கு 12 நாள் காலத்திற்குப் பிறகும் இருமல் இருந்துள்ளது.

மூச்சுத்திணறலானது உயிர் பிழைத்தவர்களுக்கு சுமார் 13 நாட்களுக்குப் பிறகு நின்றுவிடும். மற்றவர்களுக்கு இறக்கும்வரை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

நோய் துவங்கியதிலிருந்து வைரஸ் வெளியேறுவதற்கு சராசரியாக 22 நாட்கள் எடுத்துக்கொள்கிறது என தெரியவந்துள்ளது.

வுஹான் விஞ்ஞானிகளின் மற்றொரு குழு, இந்த நோய் லேசான இருமலில் இருந்து கடுமையான சுவாச பிரச்சினைகள் வரை எட்டு நாட்களில் முன்னேறக்கூடும் என்று கூறியுள்ளது.

இந்த ஆய்வாளர்கள் குழு வுஹான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் மருத்துவமனையில் 138 நோயாளிகளை ஆய்வு செய்தது.

இவர்களுடைய கண்டுபிடிப்பில் முதல் அறிகுறியாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து 5 நாட்களுக்கு சுவாச பிரச்சனைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

அதிலிருந்து எட்டுநாட்களுக்கு பின்னர் அவர்களுக்கு செயற்கை சுவாசம் தேவைப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்துள்ளன.

பாதிக்கும் மேற்பட்டவர்கள் சோர்வு மற்றும் உலர்ந்த இருமல், மூன்றில் ஒரு பங்கு தசை வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவற்றை அனுபவித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்