103 வயதில் கொரோனாவை வென்று கெத்தாக வீடு திரும்பிய பாட்டியின் புகைப்படம் வெளியீடு

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஈரானில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய 103 வயது பாட்டியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஈரானில் கொரோனா வைரஸ்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,135 ஆக அதிகரித்துள்ளது. 17,361 பேருக்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவுவதை தவிர்க்க அந்நாட்டு அரசு தீவர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 103 வயது பாட்டி, குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

கடந்த வாரம் கொரோனா பாதிப்பால் செம்னான் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 103 வயதான காவர் அஹ்மதி குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் என செம்னன் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது.

கொவிட்-19 வைரஸிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கும் 103 வயதான காவர் அஹ்மதியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

கடவுளுக்கு நன்றி, நான் கொரோனா வைரஸை தோற்கடித்தேன் என்று எழுதப்பட்டிருக்கும் காகிதத்துடன் காவர் அஹ்மதி படத்துடன், அவர் 103 வயதைக் குறிக்கும் தனது உடல்நல காப்பீட்டு சான்றிதழை காட்டும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

சுமார் 2 மாதங்களில் காவர் அஹ்மதிக்கு 104 வயதாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்