சீனா, இத்தாலியை அடுத்து கொரோனாவால் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் நாடு: உலக சுகாதார அமைப்பு கவலை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு இரையான சீனா, இத்தாலிக்கு அடுத்து ஆப்பிரிக்கா மிகக் கடுமையாக பாதிக்கப்படும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 475 பேர் மரணமடைந்துள்ளனர்.

ஒரே நாளில் சுமார் 4,200 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35,713 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீனா மற்றும் இத்தாலிக்கு அடுத்து மிகக் கடுமையாக பாதிக்கப்படும் நாடாக ஆப்பிரிக்கா மாறக் கூடும் என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த இரு நாட்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 116 என அதிகரித்துள்ளதே இந்த எச்சரிக்கைக்கு காரணம் என கூறப்படுகிறது.

தென் ஆப்பிரிக்கா சுகாதார அமைச்சர் Zweli Mkhize தெரிவிக்கையில், இதுபோன்ற ஒரு நெருக்கடியை எதிர்பார்க்கவில்லை என்றார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களில் 14 பேருக்கு உள்ளூரில் இருந்தே தொற்று ஏற்பட்டுள்ளது எனவும், இதுவே கவலையளிக்கும் வகையில் உள்ளது என்றார்.

ஆப்பிரிக்க நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறினால் சுகாதாரத்தில் முன்னணி நாடான இத்தாலியை விடவும் மிகக் கடுமையான சூழலை எதிர்கொள்ள நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஏழ்மை நிலையிலும், அதிக மக்கள் கூட்டமும் கொண்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு மிக விரைவில் பரவ வாய்ப்புள்ளதாகவும்,

பெரும்பாலானா தென் ஆப்பிரிக்க மக்கள், கூட்டம் மிகுதியாக காணப்படும் ரயில் மற்றும் சிற்றூந்துகளைமட்டுமே போக்குவரத்துக்கு பயன்படுத்துவதாகவும்,

இதுவே கொரோனா பரவ முக்கிய காரணியாக அமையும் எனவும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

குறைந்த வருவாய் ஈட்டும் தொழிலாளர்கள் மிகுந்த சமூகம் இது. சுய தனிமைப்படுத்தலுக்கோ, வேலையில் இருந்து விடுப்பு எடுப்பதற்கோ இங்குள்ள மக்களால் முடியாது என சுகாதார நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுத்தமான குடி நீர் அல்லது போதிய சுகாதாரம் இல்லாமல் அல்லது எச்.ஐ.வி அல்லது காசநோயால் பாதிக்கப்படக்கூடிய பெருவாரியான மக்களின் நிலை தான் கவலைப்படுபடியாக உள்ளது என இங்குள்ள அதிகாரிகள் தரப்பு கவலை தெரிவித்துள்ளது.

இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக, சுமார் 3 மில்லியன் மக்களை ஈர்க்கும் சீயோன் கிறிஸ்தவ தேவாலயத்தின் ஆண்டு திருவிழாவானது ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நைஜீரியா, சீனா மற்றும் யு.எஸ் உட்பட 1,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகளைக் கொண்ட நாடுகளில் இருந்து பயணிகள் நுழைவதற்கான தடைகளை அறிவித்தது.

மேலும் அவர்களின் குடிமக்களுக்கான வருகையையும் நிறுத்தி வைத்துள்ளது. நைஜீரியாவில் வைரஸ் பாதிப்புக்கு எட்டு பேர் இலக்காகி உள்ளனர், இவர்கள் அனைவரும் சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்