மூச்சுவிட முடியாமல் திணறும் நோயாளிகள்: போராடும் இத்தாலிய மருத்துவர்கள்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

இத்தாலியில் மருத்துவர்களின் கடும் போராட்டத்திற்கு மத்தியில், நோயாளிகள் மூச்சுவிட முடியாமல் திணறும் வீடியோ காட்சியானது வெளியாகியுள்ளது.

இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை உயிருடன் வைத்திருக்க மருத்துவர்களின் துணிச்சலான முயற்சிகள் இருந்தபோதிலும், அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 3,405 ஐ எட்டியது.

இந்த எண்ணிக்கையானது சீனாவை விட உயர்ந்ததால், தங்களுடைய அனைத்து முயற்சிகளும் போதாது என இத்தாலிய மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

லோம்பார்டியில் உச்சநிலையில் உள்ள பெர்கமோ பகுதியில் இயங்கி வரும் Papa Giovanni XXII மருத்துவமனையில் எடுக்கப்பட்ட பரபரப்பான வீடியோ காட்சிகளை Sky News தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

வீடியோவை காண...

அதில் மூச்சுவிட முடியாமல் திணறும் நோயாளிகளை காப்பாற்றும் முயற்சியில் மருத்துவர்கள் தீவிரமாக ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து அங்கு பணிபுரியும் மருத்துவர் லோரென்சோ கிராசியோலி, என் வாழ்க்கையில் நான் ஒருபோதும் இவ்வளவு மன அழுத்தத்தை உணர்ந்ததில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...