இத்தாலியில் கொரோனா வைரஸால் 18 பாதிரியார்கள் பலி!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 18 பாதிரியார்கள் பலியாகியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவின் தீவிரமானது இத்தாலியில் அதிகரித்து காணப்படுவதால், அங்கிருக்கும் பொதுமக்கள் அனைவரும் அச்சத்துடன் வீட்டில் முடங்கியுள்ளனர்.

இதற்கிடையில் நோய்வாய்ப்பட்ட மக்களிடம் சென்று தைரியம் கொடுக்க வேண்டும் என போப் ஆண்டவர் கூறியதால், அதன்படி சில பாதிரியார்கள் நேரில் சந்தித்து தைரியம் கொடுத்துள்ளனர்.

அப்போது அவர்கள் மீதும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதில் மிலனுக்கு அருகிலுள்ள பெர்காமோ மறைமாவட்டத்தில் மட்டும் குறைந்தது 10 பாதிரியார்கள் கோவிட் -19 காரணமாக இறந்துவிட்டதாக கத்தோலிக்க செய்தித்தாள் Avvenire தெரிவித்துள்ளது.

மேலும் ஐந்து இறப்புகள் பர்மா நகரில் பதிவு செய்யப்பட்டுள்ளன, மற்ற வழக்குகள் வடக்கு இத்தாலியில் உள்ள ப்ரெசியா, கிரெமோனா மற்றும் மிலன் ஆகிய நகரங்களில் பதிவாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்