கொரோனாவால் இறந்தவர்களில் 70 சதவீதம் ஆண்களே: ஆராய்ச்சியாளர்கள் தகவல்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அதிகமாக ஆண்களே உயிரிழப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இத்தாலியின் கொரோனா வைரஸ் இறப்புகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை ஆண்களிடையே நிகழ்ந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றுநோயால் இத்தாலியில் குறைந்தது 3,400 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 1000க்கும் குறைவாகவே பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியின் பொது சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தின்படி, தொற்றுநோயால் முதன்முதலில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஆண்களுக்கே அதிகம் மற்றும் 60 சதவீதம் பேருக்கு வைரஸ் தாக்குதல் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய ஆய்வில் வெளியான புள்ளிவிவரங்களின்படி, இறப்புகளில் 80 சதவீதம் ஆண்கள் மற்றும் 20 சதவீதம் பெண்கள் என தெரிவிக்கப்பட்டது. அது தற்போது குறைந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதேபோல சீனாவில் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், இறந்த நோயாளிகளில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு ஆண்கள் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் ஏன் இறப்பது குறைவு என்று தெரியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் பெண்கள் இயற்கையாகவே வலுவான நோயெதிர்ப்பு சக்திகளைக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்