ஊரடங்கு உத்தரவை மீறுபவருக்கு 3 ஆண்டுகள் சிறை! துணை பிரதமர் முக்கிய அறிவிப்பு

Report Print Basu in ஏனைய நாடுகள்

குவைத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவை மீறிய எவருக்கும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும், மேலும் புதிய சட்டங்களின்படி 10,000 குவைத் தினார் அபராதம் விதிக்கப்படும் என்று நாட்டின் துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.

குவைத்தில் கொரோனாவல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 176 ஆக உள்ளது. பலர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா பரவுவதை தவிர்க்கும் விதமாக குவைத்தில் மாலை 5 மணி முதல் அதிகாலை 4 மணி வரை சுமார் 11 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் மனிதனிடமிருந்து மனித தொடர்பு வழியாக எளிதாக பரவுகின்ற நிலையில் பொதுக் கூட்டங்களைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களுக்கு விதிக்கும் அபராதம் குறித்த அறிவிப்பை நாட்டின் தேசிய செய்தி நிறுவனம் வழியாக துணை பிரதமரும் உள்துறை அமைச்சரும் அமைச்சரவை விவகார அமைச்சருமான அனஸ் அல்-சலே அறிவித்தார்.

குவைத்திகள் பெரிய கூட்டங்களைத் தவிர்ப்பதற்காக சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாததால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதாக அல்-சலே கூறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்