கடினமான நாட்கள் வரப்போகின்றன... தயாராக இருங்கள்: ஸ்பெயின் பிரதமர் வேண்டுகோள்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

மாட்ரிட் கண்காட்சி மையம் மாபெரும் மருத்துவமனையாக மாற்றப்படுவதால், 'கடினமான நாட்களுக்கு' தயாராக இருக்குமாறு ஸ்பானிஷ் பிரதமர் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸானது தீவிரமடைந்து வரும் நிலையில், வரவிருக்கும் வாரத்தில் ஸ்பெயின் ஒரு பெரிய உச்சத்தை அனுபவிக்கும் என்று நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கூறியுள்ளார்.

மேலும், 'மிகவும் கடினமான நாட்களுக்கு' தயாராக இருக்குமாறு நாட்டின் குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

மோசமான நிலைமை இன்னும் வரவில்லை. ஆனால் மிகவும் முக்கியமான தருணத்தில் இருக்கிறோம் என கூறியுள்ளார்.

மார்ச் 14 ம் தேதி விதிக்கப்பட்ட அவசரகால நிலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்பதை பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சுகாதார ஊழியர்கள் இப்போது மாட்ரிட்டில் உள்ள இஃபெமா கண்காட்சி வளாகத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையாக மாற்ற உள்ளனர்.

மாட்ரிட் சமூகம் மற்றும் ஸ்பானிஷ் அவசர இராணுவ பிரிவு 5,500 படுக்கைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுடன் COVID-19 க்கு ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையை உருவாக்கி வருகிறது.

ஸ்பெயினில் இதுவரை 25,000 க்கும் மேற்பட்டோர் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருப்பதோடு, குறைந்தது 1,326 இறப்புகள் ஏற்பட்டுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்