‘முடக்கப்படுவது தான் இப்போது ஆபத்து’..உலக சுகாதார அமைப்பின் உயர் அவசர நிபுணர் எச்சரிக்கை

Report Print Basu in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸை வெல்ல உலக நாடுகள் தங்கள் சமூகங்களை வெறுமனே முடக்கினால் மட்டும் போதது என உலக சுகாதார அமைப்பின் உயர் அவசர நிபுணர் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

பின்னர் வைரஸ் மீண்டும் எழுவதைத் தவிர்க்க பொது சுகாதார நடவடிக்கைகள் தேவை என்றும் கூறினார்.

உலக சுகாதார அமைப்பின் உயர் அவசர நிபுணர் மைக் ரியான் கூறியதாவது, நோய்வாய்ப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது, வைரஸ் உள்ளவர்கள், அவர்களை தனிமைப்படுத்துதல், அவர்களின் தொடர்புகளைக் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துதல் தான் நாம் உண்மையில் கவனம் செலுத்த வேண்டியது.

நகரங்கள், மாநிலங்கள், மாகாணங்கள் முடக்கப்படுவது தான் இப்போது ஆபத்து, வலுவான பொது சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றால், கட்டுப்பாடுகள் மற்றும் முடக்கப்பட்டது நீக்கப்படும் போது, நோய் மீண்டும் தீவிரமாக பரவும்.

நாம் வைரஸ் பரவுவதை கட்டுக்குள் கொண்டு வந்தவுடன் வைரஸை குறித்த ஆய்வை தொடர வேண்டும், வைரஸை எதிர்த்துப் போராட வேண்டும் என்று ரியான் கூறினார்.

பல தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன, ஆனால் ஒன்று மட்டுமே அமெரிக்காவில் சோதனைகளைத் தொடங்கியது. மக்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

இது முற்றிலும் பாதுகாப்பானது என்பதை உறுதி செய்ய வேண்டும். குறைந்தது ஒரு வருடமாவது ஆகும், தடுப்பூசிகள் வரும். ஆனால் நாம் பாதுகாப்பாக இருக்க இப்போது செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும் என ரியான் கூறினார்.

சீனா மற்றும் பிற ஆசிய நாடுகளைப் பின்பற்றி ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பெரும்பகுதி புதிய கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

பெரும்பாலான தொழிலாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது மற்றும் பள்ளிகள், பார்கள், விடுதிகள் மற்றும் உணவகங்கள் ஆகியவற்றை மூடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்