அமெரிக்கா தான் வைரஸை உருவாக்கியிருக்கும்: ஈரான் உச்ச தலைவர் குற்றசாட்டு

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்
520Shares

உலகெங்கிலும் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸை அமெரிக்காவே உருவாக்கியிருக்கலாம் என ஈரான் உச்ச தலைவர் மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொரோனா வைரஸால் மத்திய கிழக்கில் உள்ள ஈரானில் 1,500 க்கும் மேற்பட்டஇறப்புகள் பதிவாகியிருப்பதோடு, 20,610 பேர் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர்.

நீண்டகால எதிரிகளிடையே பதட்டங்கள் அதிகரித்த போதிலும் அமெரிக்கா தங்களுக்கு உதவி செய்ய முன்வந்ததாகவும் அதனை தான் நிராகரித்துவிட்டதாகவும், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இன்று அரசு தொலைக்காட்சியில் பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உதவுவதாக அமெரிக்கா பலமுறை முன்வந்தது. அவர்கள் தான் அந்த வைரஸை உருவாக்கியதாக ஒரு குற்றசாட்டு உள்ளது. அது உண்மையா என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் நீங்கள் எங்களுக்கு உதவ முன்வருவது விந்தையாக இருக்கிறது.

உதவி செய்வதாக கூறி, ஈரானில் வைரஸ் நிரந்தரமாக இருக்க உதவும் ஒரு மருந்தை எங்களுக்கு வழங்கினால் என்ன செய்வது? என கேள்வி எழுப்பினர்.

மேலும், அமெரிக்க தலைவர்கள் தங்களுக்கு எல்லாம் தெரிந்தது போல நடிப்பவர்கள் எனவும் விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்