பேருந்து நிறுத்தத்தில் சுருண்டு விழுந்த கொரோனா நோயாளி... ஒரே நாளில் 651 பேர் இறப்பு: பரிதவிக்கும் இத்தாலி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இத்தாலியில் பேருந்து நிறுத்தம் ஒன்றில் கொரோனா நோயாளி ஒருவர் சுருண்டு விழுந்த சம்பவம் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் தொடக்கத்தில் கொரோனா தொற்று கடுமையாக பரவி வந்த காலகட்டத்தில், மக்கள் தெரு வீதிகளில் சுருண்டு விழுந்த சம்பவங்கள் வெளியாகின.

அதுபோன்ற ஒரு கொடூர நிலை இத்தாலியில் ஞாயிற்றுக்கிழமை அரங்கேறியுள்ளது. இத்தாலியில் ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில், பேருந்து நிறுத்தமொன்றில் முகமூடி அணிந்த நபர் காத்திருந்துள்ளார்.

திடீரென்று அந்த நபர் சுருண்டு விழுந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவ உதவிக் குழுவினர்,

அந்த நபரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 651 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்புக்கு சீனாவில் இதுவரை 3,261 பேர் மரணமடைந்துள்ள நிலையில் இத்தாலியில் இறப்பு எண்ணிக்கை 5,476 என பதிவாகியுள்ளது.

ஒரே நாளில் 5,560 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 59,138 என தெரியவந்துள்ளது. இத்தாலியின் Lombardy பகுதியில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 360 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதனிடையே ஒடுமொத்த 60 மில்லியன் குடிமக்களையும் தீவிர தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும் என ரோமை பகுதி அமைச்சர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கொரோனா பரவலால் இத்தாலியின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாப்பரசர் பிரான்சிஸ் தமது வாராந்திர மக்கள் சந்திப்பையும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சிகளையும் வீடியோ நேரலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்