கொரோனா பிறப்பிடமான சீனாவில் மீண்டும் 7 பேர் மரணம்! 78 பேர் வைரஸால் பாதிப்பு! தணிந்திருந்த நிலையில் மீண்டும் பூதாகரம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

சீனாவில் மீண்டும் 78 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கடந்த சில நாட்களாக அந்த வைரசின் தாக்கம் தணிந்து வந்தது.

குறிப்பாக கொரோனா கண்டறிப்பட்ட உகான் நகரில் கடந்த 6 நாட்களாக யாருக்கும் புதிதாக தொற்று ஏற்படவில்லை.

இந்த நிலையில் சீனாவில் புதிதாக 78 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த ஏழு மரணமும் Hubei மாகாணத்தில் தான் என தெரியவந்துள்ளது.

இதில் 74 பேர் வெளிநாட்டில் இருந்து சீனாவுக்கு திரும்பியவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி மொத்தமாக சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,171 ஆக உள்ளது.

இதில் 73159 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதோடு மொத்தமாக 3277 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்