இளம் பருவநிலை மாற்ற ஆர்வலரான கிரேட்டா துன்பெர்க் கொரோனாவால் பாதிப்பு!

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஸ்வீடன் நாட்டின் இளம் பருவநிலை மாற்ற ஆர்வலரான கிரேட்ட துன்பெர்க் தமக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாகவும், சோர்வு, நடுக்கம், தொண்டை புண் மற்றும் இருமல் ஆகியவற்றால் அவதிப்பட்டதாகவும் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனால் இதே அறிகுறிகளுடன் இருக்கும் தமது தந்தையுடன் இணைந்து சுய தனிமைப்படுத்தலில் ஏற்பட்டுள்ளதாகவும் கிரேட்டா தெரிவித்துள்ளார்.

மத்திய ஐரோப்பிய நாடுகளில் பயணம் ஒன்றை முடித்து குடியிருப்புக்கு திரும்பிய நிலையிலேயே தமக்கும், தமது தந்தைக்கும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக கிரேட்டா குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சோர்வு, நடுக்கம், தொண்டை புண் மற்றும் இருமல் ஆகியவற்றால் அவதிப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

17 வயதேயான கிரேட்ட துன்பெர்க் கடந்த இரண்டு வாரங்களாக சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தற்போது பொதுமக்கள் அனைவரும் இந்த இக்கட்டான சூழலில் இருந்து தப்பித்துக்கொள்ள சுய தனிமைப்படுத்தலுக்கு முன்வர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த இரு வாரங்களாக, வாடகை குடியிருப்பு ஒன்றில், தமது தாயாரையும் சகோதையையும் பிரிந்து சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டதாக தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் பத்து நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொடர்பில் நான் சில அறிகுறிகளை உணர ஆரம்பித்தேன் என குறிப்பிட்டுள்ள கிரேட்டா,

பிரஸ்ஸல்ஸில் இருந்து என்னுடன் பயணம் செய்த என் தந்தையைப் போலவே அந்த அறிகுறிகளும் இருந்தது என்றார்.

ஸ்வீடனில் தீவிர மருத்துவ சேவை தேவை என்றால் மட்டுமே மருத்துவ உதவிகள் கிடைக்கும், நீங்களாகவே சென்று கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த முடியாது என கூறும் கிரேட்டா,

உடல்நிலை சரியில்லாத ஒவ்வொருவரும் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை கொரோனா வைரஸ் தொடர்பில் தாம் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை எனக் கூறும் கிரேட்டா,

ஆனால் எனக்கிருக்கும் அறிகுறிகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பானது என்பதை உறுதியாக நம்புகிறேன் என்றார்.

தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறேன் என தெரிவித்துள்ள அவர், முந்தைய சில நாட்களை விடவும் தற்போது தேறிவிட்டேன் என்கிறார் கிரேட்டா துன்பெர்க்.

ஸ்வீடன் நாட்டில் இதுவரை 2,286 பேர் கொரோனா பாதிப்பு இலக்காகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து கொரோனாவால் இதுவரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 36 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்