கொரோனாவால் அகதிகளுக்கு ஏற்பட்டுள்ள சோதனை..! அமெரிக்கா..கனடா..மெக்ஸிக்கோ முக்கிய அறிவிப்பு

Report Print Basu in ஏனைய நாடுகள்

மெக்ஸிகோவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் புகலிடம் கோரும் அகதிகளின் கோரிக்கையை பரீசிலினை செய்யவது தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் ஏப்ரல் 20ம் திகதி விண்ணப்பங்களை மீண்டும் பரீசிலிப்பார்கள் என்று மெக்ஸிகோவின் அகதி நிறுவனமான COMAR கூறியது.

பாஸ்போர்ட் வழங்குவதை வெளியுறவு அமைச்சகம் மார்ச் 27 முதல் ஏப்ரல் 19 வரை நிறுத்தி வைக்கும் என்று தெரிவித்துள்ளது.

மெக்ஸிகோ செவ்வாயன்று 405 கொரோனா வைரஸ் வழக்குகளைப் பதிவுசெய்தது, ஒட்டுமொத்தமாக ஐந்து இறந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் கனேடிய அரசாங்கங்களும் சமீபத்தில் புகலிடம் கோரும் செயல்முறைகளைத் தற்காலிகமாக நிறுத்தி நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

அமெரிக்கா-கனடா எல்லையில் செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்களைத் திரும்ப பெறுவதாக கனடா கூறியது.

அதே நேரத்தில் மெக்ஸிகோவில் புகலிடம் கோருவோருக்கான அனைத்து நீதிமன்ற விசாரணைகளையும் ஒத்திவைப்பதாக அமெரிக்கா கூறியது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்