கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை... கடும் மன அழுத்தம்: இளம் பெண் செவிலியர் எடுத்த விபரீத முடிவு

Report Print Santhan in ஏனைய நாடுகள்

கொரோனாவால் தவித்து வரும் இத்தாலியில், பெண் செவிலியர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகிலே அதிக உயிரிழப்புகளை கொண்ட நாடாக இத்தாலி உள்ளது. தற்போது வரை மட்டும் இத்தாலியில், 6,820 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸின் பிறப்பிடம் என்று கூறப்படும் சீனாவில் கூட, இந்த நோயால் 3,281 பேர் உயிரிழந்துள்ளதால், இத்தாலி மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.

இந்நிலையில் இத்தாலியில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் இடம் என்று கூறப்படும் Lombardy பிராந்தியத்தில் இருக்கும் மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த Daniela Trezzi என்ற 34 வயது பெண் செவிலியர், கொரோனா தொற்று உறுதியான பின் தற்கொலை செய்து கொண்டார்.

இதை இத்தாலியின் செவிலியர்களின் தேசிய கூட்டமைப்பு உறுதி செய்துள்ளது.

Daniela Trezzi

இது குறித்து அந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது நாட்டில் நிலவும் நெருக்கடியைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதன் காரணமாகவே வைரஸ் பரவுகிறது என்று அஞ்சியதால், செவிலியர் கடும் மன அழுத்தத்தால் இருந்தாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த நோய் மற்றவர்களுக்கு பரவிடக் கூடாது என்பதன் காரணமாக Daniela Trezzi தற்கொலை முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் Daniela Trezzi மிலனில் இருந்து ஒன்பது மைல் தொலைவில் உள்ள Monza-வில் உள்ள San Gerardo மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வார்டில் பணிபுரிந்து வந்தார்.

San Gerardo மருத்துவமனையின் பொது மேலாளர் Mario Alparone,அவர் மார்ச் 10 முதல் வீட்டில் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், அவர் கண்காணிப்பில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இதனால் அவரது மரணம் குறித்து அதிகாரிகள் இப்போது விசாரணை நடத்தி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...