எங்கள் பகுதியில் வேண்டாம்... கொரோனா நோயாளிகள் மீது கல்லால் அடித்த மக்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஸ்பெயின் நாட்டில் கொரோனா பாதிப்பு தங்களுக்கும் ஏற்படும் என்ற அச்சத்தில் கிராம மக்கள் சுமார் 28 நோயாளிகள் மீது கல்லால் அடித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் Alcalá del Valle என்ற பகுதியில் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையில் உள்ளது.

இதனையடுத்து சிகிச்சையால் தப்ப முடியும் என கணிக்கப்பட்ட நோயாளிகளை வேறு பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் சுகாதார ஊழியர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் இந்த விவகாரம் அப்பகுதி மக்களுக்கு ஆத்திரத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது அப்பகுதி மக்கள் கல்லால் அடித்துள்ளனர்.

பல ஆம்புலன்ஸ் வாகனங்கள் மக்கள் கோபத்திற்கு இலக்காகியுள்ளதாகவும், சுமார் 28 நோயாளிகள், பெரும்பாலும் முதியவர்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே La Línea de la என்ற பகுதியில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

பல எண்ணிக்கையிலான மக்கள் குவிந்து ஆம்புலன்சில் இருந்து கொரோனா நோயாளிகளை கீழே இறக்க அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

மட்டுமின்றி ஆம்புலன்ஸ் வாகனங்களை வெளியேறவும் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதனன்று இரவு காப்பகம் ஒன்றின் முன்பு குவிந்த சுமார் 50 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் இருவரை பொலிசார் கைதும் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Alcalá del Valle என்ற பகுதி கொரோனா பாதிப்புக்கு மிக மோசமான நிலையில் உள்ளது. இங்குள்ள பெரும்பாலானோருக்கு கொரோனா உறுதி செய்யப்படுள்ளது. இதுவரை மூவர் இப்பகுதியில் மரணமடைந்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்