கொரோனா அச்சம்...உடலில் கண்ட இடங்களில் கை வைத்து நபர் செய்த மோசமான செயலின் வீடியோ! எச்சரிக்கை தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

கொரோனா காரணமாக மக்கள் வீட்டிலே தங்கியிருக்கும் படி பல்வேறு நாடுகள் கூறி வரும் நிலையில், தாய்லாந்தில் நபர் ஒருவர் செய்த அருவருப்பான செயலில் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தாய்லாந்தில் கொரோனா வைரஸ் காரணமாக, 1,045 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அங்கு தலைநகர் பாங்காங்கில் காலை மெட்ரோ நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் செய்த செயலின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

அங்கிருக்கும் லிப்ட்டில் வரும் நபர் ஒருவர் தொலைப்பேசியை பயன்படுத்தியவாரே முதலில், லிப்டை விட்டு வெளியில் செல்கிறார். அதன் பின் மீண்டும் வந்து லிப்ட்டில் இருக்கும் பட்டன்களை அழுத்திவிட்டு, மீண்டும் வெளியேறுவது போல் சென்று கை விரல்களில் எச்சிலை தொட்டு, ஆங்காங்கே லிப்டில் தடவுகிறார்.

அதன் பின் மிகவும் மோசமாக தனது பிறப்புறுப்பில் கையை வைத்து, அதன் பின் கைவிரல்களால் லிப்ட்டில் துடைத்து, லிப்ட் பட்டன்களை அழுத்துகிறார்.

இது சரியாக உள்ளூர் நேரப்படி காலை 5.20 மணிக்கு நடந்துள்ளது. இதை உடனடியாக சிசிடிவியில் கண்ட ஊழியர்கள், அவரை பிடிக்க ஓடியுள்ளனர். ஆனால் அந்த நபர் சிக்கவில்லை, அதன் பின் கிருமி நாசினி கொண்டு, லிப்டை சுத்தம் செய்துள்ளனர்.

அதன் பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை கிருமி நாசினி கொண்டு லிப்டை சுத்தம் செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொலிசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் அந்த நபரை சிசிடிவி காட்சி உதவியின் மூலம் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

மேலும் அந்த நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால், கடும் பாதுகாப்புடனே அவரை கைது செய்ததாகவும், தற்போது மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனால் பொது இடங்களில் செல்வோர் மிகவும் கவனமுடன் செல்ல வேண்டும், அதன் பின் வீட்டிற்கு திரும்பியவுடன் கண்டிப்பாக கை கழுவ வேண்டும், ஏனெனில் இது போன்ற நபர் இப்படி செய்வதால், கொரோனா எந்த விதத்திலும் பரவலாம் என்பதற்கான ஒரு எச்சரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...