கொரோனா கொடூரம்.... பழுதான கருவிகளால் ஸ்பெயின் அரசாங்கத்தை ஏமாற்றிய சீன நிறுவனம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவில் இருந்து கொரோனா பரிசோதனை கருவிகளை வரவழைத்துக் கொண்ட ஸ்பெயின் நாடு, தற்போது அந்த கருவிகள் அனைத்தும் பழுதானவை என கண்டறிந்து அதிர்ந்துபோயுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக El Pais என்ற உள்ளூர் பத்திரிகை ஒன்று வெளியிட்ட தகவலின் அடிப்படையில்,

மாட்ரிட்டில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்கள் அனைத்தும் குறித்த சீனத்து சோதனைக் கருவிகளானது தவறாகவும் துல்லியமற்றதாகவும் செயல்பட்டன என்பதையும் நம்பகமான முடிவுகளைத் தரவில்லை என்பதையும் கண்டறிந்துள்ளன என செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், வெறும் 30 சதவீத சோதனைகள் மட்டுமே கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது எனவும் ஆதாரங்களுடம் நிரூபணமாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ள ஸ்பெயின் நாட்டில் இருந்து வெளியான இந்த செய்தி சுகாதாரத் துறையில் திகிலை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயினின் அரசாங்கம் சில நாட்களுக்கு முன்பு சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட 340,000 விரைவான சோதனை கருவிகளை மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் விநியோகித்தது.

பெரும்பாலும் மருத்துவ ஊழியர்களுக்கு, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு இந்த கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்பெயினில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில் 12 சதவிகித பேர் மருத்துவ ஊழியர்களாவார்.

மாட்ரிட் நகரில் முதல் 8,000 சோதனைகள் முன்னெடுக்கப்பட்டது சீனத்து நிறுவன சோதனை கருவிகள் மூகமாகவே.

ஆனால் அந்த சோதனை முடிவுகள் அனைத்தும் தவறாகவே அமைந்துள்ளது பின்னர் கண்டறியப்பட்டது.

இதனிடையே குறித்த் தயாரிப்புகளை விற்க அந்த நிறுவனம் சீன அதிகாரிகளிடமிருந்து உரிமம் பெறப்படவில்லை என்று மாட்ரிட்டில் உள்ள சீன தூதரகம் இன்று அறிவித்தது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...