Fact Check: இத்தாலியில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் குவியலாக புதைகுழியில் கொட்டப்படுவதாக வெளியான வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் குவியல் குவியலாக புதைகுழியில் கொட்டப்படுவதாக ஒரு வீடியோ பெரியளவில் வைரலான நிலையில் அது தொடர்பிலான உண்மை தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸால் உலகளவில் இத்தாலியில் தான் அதிக மரணம் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் அந்நாட்டில் 8000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சூழலில் நேற்று பேஸ்புக்கில் Moinuddin Hasan Altaf என்ற நபர் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அதில் குவியல் குவியலாக சடலங்கள் பெரிய புதைக்குழியில் கொட்டப்படுவது போல இருந்தது.

மேலும் இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் இப்படி தான் புதைப்படுகிறார்கள் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் அந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

அதன்படி அந்த வீடியோவானது கடந்த 2016ல் வெளியான அமெரிக்க படமான Pandemic- இடம்பெற்றுள்ள காட்சியாகும்.

அதாவது கொடிய தன்மை கொண்ட வைரஸ் தாக்கி மக்கள் எவ்வாறு கொத்து கொத்தாக உயிரிழக்கிறார்கள் எனவும் அவர்கள் சடலங்கள் இப்படி தான் புதைக்கப்படுகிறது என்பதையும் அந்த காட்சி காட்டுவதாக அமைந்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...