கொரோனாவிடமிருந்து தற்காத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கையை சுட்டுக்கொண்ட நபர்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பிரேசில் நாட்டவர் ஒருவர் கொரோனாவிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று எண்ணி செய்த ஒரு செயலால் கையை சுட்டுக்கொண்டார்.

ஒரு பக்கம் மக்கள் கட்டுப்பாடுகளை மதிக்காமல் செயல்பட்டு வரும் நிலையில், மற்றொரு பக்கம் முன்ன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சீரியஸாக பின்பற்றுவோரும் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஆனால், அப்படி தனைக் காத்துக்கொள்ளும் முயற்சியில் நடந்த ஒரு தவறால், தன் கையை சுட்டுக்கொண்டார் ஒருவர்.

பிரேசிலிலுள்ள மளிகை கடை ஒன்றிற்குள் நுழையும் ஒருவர், அங்கு கைகளை கிருமிநீக்கம் செய்யும் சானிட்டைசர் இருப்பதாக எண்ணி, ஒரு டிஸ்பென்சரின் அடியில் கையை நீட்டி அதன் பொத்தானை அழுத்துகிறார்.

ஆனால், அது சானிட்டைசர் அல்ல, அது காபி வைத்திருக்கும் டிஸ்பென்சர். சுடச்சுட காபி கையில் கொட்ட, சூடு தாங்காமல் கையை உதறும் அவர், தன்னை யாராவது பார்த்துவிட்டார்களா என்பதை அறிய, அக்கம் பக்கம் பார்க்கிறார்.

ஆனால், உலகமே அதை பார்க்கப்போகிறது என்பது அவருக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அங்கு வைக்கப்பட்டுள்ள CCTV கமெராவில் இந்த காட்சி பதிவாகியுள்ளது.

ஆனால், இந்த வீடியோவைப் பார்த்தவர்கள், அவருக்கு அந்த செயல் அவமானமாக தோன்றினாலும், அவரது நோக்கம் சரியானதுதான் என பாராட்டுகிறார்கள்.

ஏனென்றால், உலக சுகாதார மையமும், கொரோனா பரவுவதை தடுப்பதற்காக, மக்களை சோப்பு மற்றும் நீரினால் கைகளை கழுவுமாறும், சானிட்டைசர் கொண்டு கைகளை கிருமிநீக்கம் செய்யுமாறும் தானே கூறிவருகிறது!

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...