ஸ்பெயினில் 24 மணி நேரத்தில் 838 பேர் கொரோனாவால் மரணம்! புதிய உச்சம் என தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸுக்கு 838 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அந்நாட்டில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கையில் இது புதிய உச்சம் என தெரியவந்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதிலும் ஸ்பெயினில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. அங்கு 73,235 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5,982 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 838 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி ஸ்பெயினுல் ஒரே நாளில் இவ்வளவு உயிரிழப்புகள் இதுவரை பதிவாகாத நிலையில் இது புதிய உச்சம் என தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்