மருத்துவ பொருட்களுடன் தீ பிடித்து விபத்துக்குள்ளான விமானம்: 8 பேர் பலி!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்ஸில் மருத்துவ பொருட்களை ஏற்றிச்சென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிலிப்பைன்ஸின் சர்வதேச விமான நிலையமான மணிலாவில் இருந்து மருத்துவ பொருட்களுடன் ஜப்பான் நோக்கி சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் Ninoy Aquino சர்வதேச விமான நிலையத்தில் ஓடுதளத்தில் சென்றுகொண்டிருந்த போது திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.

இதனையடுத்து விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் 9 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக விமானத்தில் பயணித்த 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விமானத்தை பிலிப்பைன்ஸ் சுகாதார அமைச்சகம் நாடு முழுவதும் அடிப்படை மருத்துவ பொருட்களை கொண்டு செல்வதற்காக வாடகைக்கு எடுத்திருந்தது.

இந்த நிலையில் விமானம் விபத்திற்குள்ளான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்