கொரோனாவுக்கு பரிதாபமாக பலியான பாடசாலை மாணவன்: குறைந்த வயதில் பலியாகும் முதல் நபர்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

போர்த்துகல் நாட்டில் பாடசாலை மாணவன் கொரோனாவுக்கு பரிதாபமாக பலியான நிலையில், ஐரோப்பிய நாடுகளில் குறைந்த வயதில் கொரோனாவுக்கு பலியாகும் முதல் நபர் என கூறப்படுகிறது.

வடமேற்கு போர்த்துகலில் கடற்கரை நகரமான போர்டோவுக்கு அருகே அமைந்துள்ள பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனே கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

மருத்துவ ரீதியாக எவ்வித சிக்கலும் இல்லாத நிலையில், திடீரென்று கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டதாகவும்,

இதனையடுத்து ஞாயிறு அதிகாலையில் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரான்சில் 16 வயது பாடசாலை மாணவி கொரோனாவுக்கு பலியான தகவல் சமீபத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து தற்போது போர்த்துகல் 14 வயது சிறுவன் மரணமடைந்த தகவல் வெளியாகியுள்ளது.

போர்த்துகல் நாட்டில் இதுவரை 5,962 பேர் கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 792 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ள நிலையில், கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 119 என அதிகரித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்