உலகபுகழ்பெற்ற பிரபல கால்பந்து வீரருக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என மனைவி கண்ணீர்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

உலக புகழ்பெற்ற துருக்கி முன்னாள் கால்பந்து வீரர் rustu recbe கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் மனைவி அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

துருக்கி கால்பந்து வீரரான rustu recbe ரசிகர்களிடையே மிக பிரபலமானவர். அதிலும் தனது நீளமான தலைமுடியுடன் களத்தில் அவர் ஆக்ரோஷமாக விளையாடுவது பலருக்கும் மிகவும் பிடிக்கும்.

இந்நிலையில் rustu recbe கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து rustu recbe-ன் மனைவி Isil Recber கூறுகையில், எல்லாம் சரியாக தான் இருந்தது, திடீரென என் கணவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்ட நிலையில் பரிசோதனையில் அது உறுதி செய்யப்பட்டது.

இந்த அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவில்லை. எனக்கும் என் இரண்டு பிள்ளைகளுக்கும் கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்தது.

அதே சமயம் rustu recbe-ஐ மருத்துவமனையில் பார்க்க முடியாமல் தவித்து வருகிறேன்.

அவர் தற்போது மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார், இதோடு கடவுளும் பார்த்து கொள்வார் என நம்புகிறேன் என கண்ணீருடன் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்