பிரசவ வலியால் துடித்த கொரோனா நோயாளி: அறுவை சிகிச்சையின் போது குழந்தையுடன் பரிதாப மரணம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்
1480Shares

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி பெண் அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார்.

ஸ்பெயினில் லா கொருனா நாகரை சேர்ந்த 37 வயதான கர்ப்பிணி பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அவருக்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், வீட்டில் சென்று தனிமைப்படுத்துக்கொள்ளுமாறு மட்டும் அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்பேரில் தனிமைப்படுத்திக்கொண்ட பெண்ணின் உடல்நிலை மோசமடைய துவங்கியுள்ளது. நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் காய்ச்சல் தீவிரமடைந்திருக்கலாம் என கருதிய மருத்துவர்கள், தெரசா ஹெர்ரெரா மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர்.

ஆனால் அறுவை சிகிச்சையின் போது அவரது குழந்தை உயிரிழந்துள்ளது. அடுத்த அரை மணி நேரம் கழித்து அந்த பெண்ணும் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில், அந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவந்தது. மேலும், அறுவை சிகிச்சையின் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாலே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்