கொரோனாவால் சாக விருப்பமில்லை... முதிய வயது தம்பதியின் நடுங்க வைக்கும் செயல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஸ்பானிய தம்பதி ஒன்று கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க, கத்தியால் தாக்கிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த ஸ்பானிய தம்பதி Tenerife தீவில் உள்ள தங்கள் குடியிருப்பில் இந்த நடுங்க வைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் 82 வயது பெண்மணி ரத்த வெள்ளத்தில் குளித்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது ஊனமுற்ற 86 வயது கணவன் கத்தியால் தாக்கப்பட்ட காயங்களுடன் குற்றுயிராக மீட்கப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் இருவரும் கொரோனாவால் அச்சுறுத்தலில் இருந்ததாகவும், அதனாலையே தற்கொலை முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் விரிவான விசாரணைக்கு பின்னரே உண்மையான பின்னணி என்ன என்பது தெரியவரும் எனவும், தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் முதியவரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

குறித்த தம்பதியின் இரண்டாவது குடியிருப்பிலேயே அந்த பெண்மணியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அக்கம்பக்கத்தினர் எழுப்பிய சந்தேகத்தின் அடிப்படையிலேயே பொலிசார் அந்த குடியிருப்பில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

ஊனமுற்ற அந்த முதியவர் தமது படுக்கையிலேயே ரத்த வெள்ளத்தில் கிடந்திருந்தார். தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார்.

கணவருக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகவும், அவரது மனைவியால் கவனிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் ஸ்பானிய செய்தித்தாள்கள் இந்த விவகாரம் தொடர்பில் கூறுகின்றன.

மேலும், அந்தப் பெண்மணி முதலில் தனது கணவரை கத்தியால் தாக்கி காயங்களை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும்,

பின்னர் தனக்குத்தானே காயங்களை ஏற்படுத்த நினைத்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் அவர் நினைத்தது போன்று நடக்காமல் போனதுடன், தவறி விழுந்த அவர் சுவற்றில் மோதிக்கொண்டுள்ளார்.

பொலிசார் பிரேத பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மரணமடைந்த பெண்மணியும் அவர் கணவரும் அந்த பகுதியில் அனைவருக்கும் பரிச்சயமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்