ஊரடங்கு உத்தரவால் பிரித்தானியா-இத்தாலியில் ஏற்பட்டுள்ள பலன்கள்! கொரோனாவில் இருந்து தப்பலாம்

Report Print Abisha in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் தாக்கத்தால், உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது என்றே சொல்லலாம்.

கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளை கதிகலங்க வைத்துள்ள கொரோனா தொற்று முதலில் தோன்றிய சீனாவில் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பெரும் தாக்கத்தை உருவாக்கி வருகிறது.

இதனால், அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பிரித்தானியா மற்றும் இத்தாலியில் ஏற்பட்டுள்ள பலன்கள்.

பிரித்தானியா

பிரித்தானியா தலைமை அறிவியல் ஆலோசகர் பேட்ரிக் வாலன்ஸ், ''மக்கள் வீட்டிலேயே இருப்பதால் கொரோனா தொற்று பரவும் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் தனித்து இருப்பது கொரோனா தாக்கத்தை குறைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது பிரித்தானியா மருத்துவமனைகளில் 9000 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடத்த வெள்ளிக்கிழமை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டவர்களின் எண்ணிக்கை 6000ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இத்தாலி

இத்தாலியில் ஈஸ்டர் தினம் வரை முடக்குவதாக அந்நாடு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதே சமயம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இத்தாலியில் குறைந்து வருகிறது என்ற அரசு அறிவித்துள்ளது.

அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,01,000 கடந்துள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினம், புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1648ஆக இருந்தது. அதற்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,815ஆக இருந்தது.

அவ்வகையில், புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்றே கூறமுடியும்.

ஆனால், இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சமீபத்தில் 756ஆக இருந்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, அடுத்த நாளே 812ஆக அதிகரித்தது.

ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாக கடைபிடித்தால் நிச்சயம் இந்த நோய்யில் இருந்து அனைவரும் முற்றிலும் விடுபடலாம் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்