இனி மக்கள் யாரும் கொரோனா தனிமைப்படுத்தலை கடைபிடிக்க தேவையில்லை! பிரேசில் ஜனாதிபதி வலியுறுத்தல்

Report Print Basu in ஏனைய நாடுகள்

பிரேசிலில் அமல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்துதல் நடவடிக்கை இனி தேவையில்லை என அந்நாட்டு ஜனாதிபதி ஜேர் போல்சானாரோ கூறியுள்ளார்.

பிரேசிலில் கொரோனாவால் 165 பேர் பலியாகியுள்ள நிலையில், 4,661 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனாவை எதிர்த்து போராட பிரேசிலில் நாடு முழுவதும் தனிமைப்படுத்துதல் நடவடிக்கை அமல்படுத்துப்பட்டது.

இந்நிலையில், நாட்டில் அமலில் உள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் நடவடிக்கையால் பலர் வேலை இழந்துள்ளனர், ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி போல்சானாரோ கவலை தெரிவித்தார்.

மக்கள் உடனடியாக வேலைக்கு செல்ல தனிமைப்படுத்துதல் நடவடிக்கை இனி தேவையில்லை என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சுய தனிமைப்படுத்துதல் உட்பட உள்ளுர் அதிகாரிகள் அமல்படுத்திய நடவடிக்கைகளை போல்சானாரோ கடுமையாக விமர்சித்தார்.

பிரேசிலின் செனட் திங்கள்கிழமை மாலை நாட்டின் ஏழ்மையான குடிமக்களில் சிலருக்கு ஒரு மாதத்திற்கு 600 ரெய்ஸ் என மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியது, இதற்கு கிட்டத்தட்ட 50 பில்லியன் ரெய்ஸ் செலவாகும்.

போல்சனாரோவின் கூற்றுப்படி, நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் 800 பில்லியன் ரெய்ஸ் செலவாகும், மேலும் இந்த ஆண்டு சரியும் என எதிர்பார்க்கப்படும் பொருளாதாரம் மீண்டும் ஒரு வருடத்திற்குள் பழைய பாதையில் செல்லக்கூடும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்