உலகில் கொரோனா வைரஸின் பிடியில் சிக்காத நாடுகள்! வெளியான தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
1129Shares

கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் நடுங்கி வரும் நிலையில், இந்த வைரஸ் காரணமாக ஒருவர் கூட பாதிக்கப்படாத நாடுகளும் உள்ளது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகையே மிரட்டி வரும் கொடிய நோயாக கொரோனா வைரஸ் இருக்கிறது. இந்த வைரஸ் காரணமாக இதுவரை 809,440 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 39,566 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் இந்த வைரஸிடம் இருந்து தப்பிப்பதற்கு பல்வேறு நாடுகள் போராடி வருகின்றன.

மனிதர்களிடமிருந்து இந்த நோய் எளிதாக பரவுவதால், விமான போக்குவரத்து மூலம் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டில் இருக்கும் நபர்களை இந்த நோய் தாக்கிவிடுவதாக கூறப்படுகிறது.

அதன் பின் அந்த நோய் மெல்ல, மெல்ல குறிப்பிட்ட நாடுகளில் பரவி, இப்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வடக்கு பசிபிக் கடற்பகுதியில் பலாவ் மொழிபேசும், சுமார் 18,000 மக்கள் தொகை கொண்ட சின்னஞ்சிறு நாடு பலாவ் தீவில், இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை.

இந்த நாட்டின் நாணயம் அமெரிக்க டொலர் ஆகும். பசிபிக் பிராந்திய நாடுகள் பலவும் கொரோனாவின் கொடூர தாக்கத்தில் சிக்கி இருக்கின்றன.

இதேபோல் சுமார் 1 லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட குட்டிநாடான டோங்காவும் கொரோனாவின் பிடியில் சிக்கவில்லை.

சாலமன் தீவுகள், மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா ஆகிய நாடுகளும் கொரோனா தாக்காத நாடுகளின் பட்டியலில் உள்ளன.

இவைதவிர அண்டார்டிகா கண்டமும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. அதேநேரத்தில் பசிபிக் கடலில் உள்ள வடக்கு மரியானா தீவுகள் நாடுகளில் முதலாவது கொரோனா பாதிப்பு அண்மையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பயணக் கட்டுப்பாடுகள் நிறைந்து இருப்பதால் தான் இந்தப் பகுதிகளில் எல்லாம் கொரோனா பரவவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்