ரஷ்யா ஜனாதிபதி புடினுடன் கைகுலுக்கிய தலைமை மருத்துவருக்கு கொரோனா உறுதி.! மௌனம் காக்கும் ரஷ்யா

Report Print Basu in ஏனைய நாடுகள்

கடந்த வாரம் ரஷ்யா ஜனாதிபதி புடினுடன் கைகுலுக்கிய தலைமை மருத்துவருக்கு கொரோனா உறுதியானது.

தலைநகர் மாஸ்கோவில் உள்ள பிரபலமான கொம்முனர்கா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டெனிஸ் புரோட்சென்கோ கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் கொரோனா நோயாளிகளை சந்திக்க கொம்முனர்கா மருத்துவமனைக்கு சென்ற புடின், தலைமை மருத்துவர் புரோட்சென்கோவை சந்தித்து அவருடன் கைகுலுக்கியுள்ளார்.

பின்னர், பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்தார்.

தற்போது புரோட்சென்கோவுக்கு கொரோனா உறுதியான நிலையில் புடினுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

ரஷ்யாவில் கொரோனாவுக்கு 17 பேர் பலியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,337 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்