கொரோனா வைரஸ் பரவுவது குறித்து முதலில் எச்சரித்த வுஹான் பெண் மருத்துவர் திடீர் மாயம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது குறித்து முதன்முதலில் எச்சரித்த மருத்துவர்களில் ஒருவரான பெண் மருத்துவர் திடீரென மாயமாகியுள்ளார்.

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் திகதி, வுஹான் மருத்துவமனை ஒன்றில் பணி புரியும் Dr Ai Fen என்னும் பெண் மருத்துவருக்கு 'SARS coronavirus' என்று குறிப்பிடப்பட்ட ஒரு நோயாளியின் ரிப்போர்ட் கிடைத்தது.

அதைப் படித்துப்பார்த்த Dr Aiக்கு பதற்றத்தில் உடல் வியர்த்து நனைந்துவிட்டது.

SARSஆல் நிகழ்ந்த பயங்கரங்களை நன்கறிந்திருந்தவரான Dr Ai, உடனே தனது சக மருத்துவரான Dr Li Wenliang என்பவருக்கு இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இந்த Dr Li Wenliangதான் பொய்யான வதந்திகளை பரப்பியதாக அரசால் தண்டிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் 'SARS' என்ற வார்த்தையை வட்டமிட்டு, படம் ஒன்றை தனது முன்னாள் வகுப்பு தோழர்களுக்கும், தனது துறையிலேயே உள்ள சக மருத்துவர்களின் சாட் குழு ஒன்றிற்கும் அனுப்பியிருந்தார் Dr Ai.

அன்று மாலையே அந்த படம் வேகமாக சமூக ஊடகங்களில் பரவியது.

இந்த வைரஸ் குறித்து தனது மருத்துவமனை அதிகாரிகளையும் எச்சரித்துள்ளார் Dr Ai.

இதற்கிடையில், SARS போன்ற ஒரு நோய் குறித்த தகவலை தனது சக மருத்துவர்களுடன் பகிர்ந்துகொண்டதற்காக மருத்துவமனை நிர்வாகம் அவரை கூப்பிட்டு கடுமையாக கண்டித்தது.

இரண்டு நாட்களுக்குப்பின், மருத்துவமனையின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் முன் ஆஜராக Dr Li Wenliangக்கு உத்தரவிடப்பட்டது. Dr Aiம் கடுமையாக கண்டிக்கப்பட்டார்.

மருத்துவராக இருந்து கொண்டு வதந்திகளை பரப்பியதாக கூறி, தான் மிகவும் பயங்கரமாக, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையாக கண்டிக்கப்பட்டதாக தெரிவித்தார் அவர்.

பின்னர் சீன ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த Dr Ai, தான் முன்கூட்டியே எச்சரித்தும், அதை மருத்துவமனை நிர்வாகம் அலட்சியப்படுத்தியதாக தெரிவித்திருந்தார்.

இன்று நடக்கப்போவதை நான் முன்பே அறிந்திருந்தால், அதாவது இவ்வளவு பயங்கரமாக கொரோனா பரவி, இத்தனை உயிர்களை பலி வாங்கும் என்று தெரிந்திருந்தால், தான் கண்டிக்கப்பட்டதற்காக கவலைப்பட்டிருக்கவேமாட்டேன் என்றார் அவர்.

ஆனால், அந்த பேட்டிக்குப்பின் Dr Ai திடீரென மாயமாகியுள்ளார். இதனால், அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

இதற்கிடையில் Dr Li Wenliang மட்டுமின்றி அவருடன் பணியாற்றிய மூன்று மருத்துவர்களும் கொரோனாவுக்கு பலியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்