வெளிநாட்டில் கொரோனாவுக்கு பலியான இந்திய வம்சாவளி வைரஸ் ஆய்வாளர்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இந்திய வம்சாவளி வைராலஜி ஆய்வு நிபுணர் கீதா ராம்ஜி தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸுக்குப் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் இதுவரை 5 பேர் கொரோனா பாதிப்புக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

கீதாராம்ஜி ஒருவாரத்துக்கு முன்னர் தான் லண்டனிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு திரும்பியுள்ளார் என கூறப்படுகிறது.

இருப்பினும் வெளியில் அவருக்கு கரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என கூறப்படுகிறது.

50 வயதான கீதா ராம்ஜி கிருமிகளுக்கான தடுப்பு மருந்து நிபுணர் என்பதோடு ஹெச்.ஐ.வி. தடுப்பு ஆராய்ச்சியில் முன்னணியில் இருப்பவர்.

இவரது மறைவால் வைரஸ் ஆய்விலும் ஹெச்.ஐ.வி. தடுப்பு ஆய்விலும் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று தென் ஆப்பிரிக்க ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்ததோடு, இவரது மறைவில் பெரும் சோகம் அடைந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்க இந்திய வம்சாவளி பார்மசிஸ்ட் பிரவின் ராம்ஜியை இவர் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

2018 ஆம் ஆண்டு கீதாராம்ஜிக்கு லிஸ்பனில் தனித்துவமான பெண் விஞ்ஞானி விருது அளிக்கப்பட்டது.

ஹெச்.ஐ.வி தடுப்பு ஆய்வுக்காக 2012-ல் வாழ்நாள் சாதனை விருது இவருக்கு வழங்கப்பட்டது. அவர் 170க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார்.

கீதா ராம்ஜியின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்