இரண்டாம் உலகப் போருக்கு பிறகு... மிகவும் சவாலான நெருக்கடி: எச்சரிக்கும் ஐக்கிய நாடுகள் மன்றம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் எதிர்கொள்ளும் மிகவும் சவாலான நெருக்கடி கொரோனா வைரஸ் தொற்றுநோய் என ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகின் 200-கும் அதிகமான நாடுகள் சீரழிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவிய காலகட்டத்தில், அதை எள்ளி நகையாடிய டிரம்ப் அரசாங்கம் தற்போது கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.

இத்தாலி மிக மோசமாக பாதிக்கப்பட்டு, அண்டை நாடுகளிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகவும் சவாலான சுகாதார நெருக்கடியாக கொரோனா தொற்று உள்ளது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய நாடுகள் அவையின் 75 ஆண்டு கால வரலாற்றில் இது போன்ற ஒரு உலக சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அவை நிறுவப்பட்ட பிறகு, மிக மோசமான உலக நெருக்கடியாக, ஏன் கொரோனா பெருந்தொற்றை நீங்கள் கருதுகிறீர்கள் என்று குட்டரெசிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த குட்டரெஸ், ஒருபுறம் உலக மக்கள் அனைவருக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இன்னொரு புறம், பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றார்.

மேலும், இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வர உடனடியாக ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை எனவும் பரிசோதனை, தனிமைப்படுத்துதல், சிகிச்சை ஆகிய சுகாதார திறனை அதிகரிக்க வேண்டும் எனவும் ஐநா பொதுச்செயலாளர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்