இஸ்ரேல் நாட்டின் சுகாதார அமைச்சர் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா உறுதி!

Report Print Basu in ஏனைய நாடுகள்

இஸ்ரேல் நாட்டின் சுகாதார அமைச்சர மற்றும் அவரது மனைவிக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் கொரோனா வைரஸ்க்கு 26 பேர் பலியாகியுள்ள பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,092 ஆக அதிகரித்துள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நண்பரும், நாட்டின் சுகாதார அமைச்சருமான யாகோவ் லிட்ஸ்மேனுக்கு (71) உறுதியானது.

தொற்றுநோய் பரவுவது மற்றும் அதை எதிர்த்துப் புதிய நடவடிக்கைகள் எடுப்பது குறித்த தகவல்களை வழங்குவதற்காக பிரதமருடன் தொடர்ந்து செயல்பட்டார் லிட்ஸ்மேன்.

ஆனால் சமீபத்திய வாரங்களில் லிட்ஜ்மேன் பொது நிகழ்வுகளில் பங்கேற்பதை குறைத்துவிட்டார், அதற்கு பதிலாக அமைச்சின் இயக்குநர் ஜெனரல் தினசரி விளக்கங்களை அளித்தார்.

இந்நிலையில், லிட்ஜ்மானும் அவரது மனைவியும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொற்றுநோயியல் விசாரணை மேற்கொள்ளப்படும், கடந்த இரண்டு வாரங்களில் சுகாதார அமைச்சர் மற்றும் அவரது மனைவியுடன் தொடர்பு கொண்டவர்களுக்கு தனிமைப்படுத்த கோரிக்கைகள் அனுப்பப்படும் என சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பாராளுமன்ற உதவியாளருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து பிரதமருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதியானது.

எனினும், 70 வயதான பிரதமர் புதன்கிழமை பிற்பகல் வரை சுய-தனிமையில் இருந்தார், ஆனால் அவருக்கு லிட்ஸ்மேனுடன் தொடர்பு இருந்தாரா என்பது தெரியவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்