நான்கு வாரங்களில் முக்கிய திருப்பம் ஏற்படலாம்: சீனாவின் தலைமை கொரோனா வைரஸ் நிபுணர் அளித்துள்ள நம்பிக்கையூட்டும் செய்தி!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

இம்மாத இறுதிக்குள் கொரோனா தொற்று விடயத்தில் ஒரு முக்கிய திருப்பம் ஏற்படலாம் என சீனாவின் தலைமை கொரோனா வைரஸ் நிபுணர் தெரிவித்துள்ள விடயம் நம்பிக்கையை ஊட்டுவதாக அமைந்துள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பீஜிங் அமைத்துள்ள மருத்துவ நிபுணர் குழுவின் தலைவரான Dr Zhong Nanshanஇடமிருந்து இந்த நம்பிக்கையூட்டும் செய்தி வந்துள்ளது.

83 வயதான தொற்று நோய் நிபுணரான Zhong, சீனாவின் தீவிர கண்காணிப்பு காரணமாக, மீண்டும் சீனாவில் ஒரு நோய்த்தொற்று உருவாகும் வாய்ப்பும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

பல்வேறு நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதையடுத்து, ஏப்ரல் (இம்மாதம்) இறுதிவாக்கில் புதிதாக கொரோனா தொற்று உருவாகுவது குறையும் என தான் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் உடலில் ஆன்டிபாடிகள் இருப்பதால், அவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்றும் வாய்ப்புகள் மிகக் குறைவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களில் சிலருக்கு ஒருவேளை மீண்டும் கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பதாக தெரியவந்தாலும், அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு கொரோனா பரவும் வாய்ப்பும் மிகக்குறைவே என்கிறார் அவர்.

காரணம், அத்தகையவர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் உயிருள்ள வைரஸ் இருப்பதாக கண்டுபிடிக்கப்படவில்லை என்கிறார் Zhong.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்