இத்தாலியை தொடர்ந்து மற்றொரு ஐரோப்பிய நாட்டில் 10,000ஐ கடந்தது கொரோனா பலி எண்ணிக்கை!

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஐரோப்பா நாடானா ஸ்பெயினல் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ கடந்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அந்நாட்டு சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, ஸ்பெயினில் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்ட பின்னர் குறைந்தது 10,003 பேர் இறந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 950 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒரு நாளில் உலகின் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் இறப்புகளை ஸ்பெயின் பதிவு செய்தது.

இருப்பினும், புதன்கிழமையை போலவே வியாழக்கிழமையும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10.5% உயர்ந்துள்ளது மற்றும் கடந்த இரண்டு வாரங்களில் பதிவு செய்யப்பட்டதை விட சதவீத அடிப்படையில் குறைவாகும்.

ஸ்பெயினில் புதிய வழக்குகளின் எண்ணிக்கை கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது என்றும், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்த எடுக்கப்பட்ட கடுமையான அவசர நடவடிக்கைகள் செயல்படுவதாகவும் நாட்டின் சுகாதார அமைச்சர் கூறியதைத் தொடர்ந்து இது வந்துள்ளது.

உலகின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஸ்பெயின் ஒன்றாகும், கொரோனாவால் அதிக உயிழிப்புகள் ஏற்பட்ட நாடுகள் பட்டியலில் மற்றொரு ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு(13,155) அடுத்த படியாக ஸ்பெயின் (10,003) உள்ளது.

மொத்தமாக பதிவான வழக்குகள் பட்டியலில் அமெரிக்கா(2,15,357), இத்தாலிக்கு(1,10,574) அடுத்தபடியாக ஸ்பெயின்(1,10,238) உள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்