அமேசான் மழைகாடு பகுதிக்குள் நுழைந்த கொரோனா! அச்சத்தில் அரசு

Report Print Abisha in ஏனைய நாடுகள்

உலகை ஆட்டிபடைக்கும் கொரோனா வைரஸ் தற்போது, அமேசான் காட்டுக்குள்ளும் நுழைந்துள்ளது.

கொரோனா தொற்றால், உலகம் முழுவதும் 10,14,256 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 52,982பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் பிரேசில் நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றது. அந்நாட்டில் இதுவரை 8044பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 324 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், பிரேசிலின் மழைகாடுகள் என்று வர்ணிக்கப்படும் அமேசான் காட்டில் வசிக்கும் பழங்குடியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர், சாண்டோ அன்டோனியோ மாவட்டம் Içá,-ல் வசித்து வந்துள்ளார். இவர், கொகமா என்ற பழங்குடியினத்தை சேர்ந்த 20 வயது நிரம்பியவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா தொற்றின் அறிகுறி பெருமளவில் தென்படாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், அவரையும் அவர் குடும்பத்தினரையும் அரசு தனிமைபடுத்தியுள்ளது.

அவர், வசிக்கும் பகுதியில் கிட்டத்தட்ட 30,000க்கும் அதிகமான பழங்குடியினர் உள்ளதால் வேகமாக இந்த நோய் பரவும் என்று அச்சம் ஏற்படுள்ளது.

அந்த குறிப்பிட்ட பெண், மருத்துவ துறையில் பணியாற்றி வந்ததாகவும், அவர் சிறிதுகாலம் விடுமுறை முடித்து திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்