உண்மை அலசல்: பழம்தமிழர் இலக்கியத்தில் கொரோனாவுக்கு மருந்து என்ற செய்தி போலியானது!

Report Print Abisha in ஏனைய நாடுகள்

பழந்தமிழர் இலக்கியத்தில், கொரோனாவுக்கு மருந்து உள்ளதாக சமூக வலை தளங்களில் உலாவிய செய்தி போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தொடர்ந்து பல போலி தகவல்கள் உலவந்தவண்ணம் உள்ளனர்.

குறிப்பாக தமிழர்களுடைய பாரம்பரியம் கொரோனா வைரஸ் நோய் தொற்றை குணமடைய செய்யும் என்ற பல தகவல்கள் உலா வந்த வண்ணம் உள்ளது.

அதில், 1914-ம் ஆண்டு வெளியான கைமுறை பாக்கெட் வயித்தியம் என்ற நூலில் கொரோனாவுக்கு மருந்து இருக்கிறது என தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

1914-ம் ஆண்டு பூ.சு. துளசிங்க முதலியாரால் ஏட்டுப் பிரதியும் கை முறையும் அச்சுப் பிரதியுங்கொண்டு ஆய்ந்து யெழுதி முடிவு பெற்று என்ற முகப்புரையுடன் இந்த நூலின் முதல் பக்கம் தொழில்நுட்பம் உதவியால் புகைப்படம் எழுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் பக்கம் 61-ல் கோரோன மாத்திரை என்ற தலைப்பில் பழந்தமிழர் மருத்துவ முறை ஒன்றும் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது மிளகு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி எப்படி இந்த மாத்திரை தயாரிப்பது என்பதற்கான செய்முறை விளக்கம் இதில் இடம்பெற்றிருக்கிறது.

ஆனால், அது உண்மையான பதிவு அல்ல என்று தெரியவந்துள்ளது. உண்மையில், கோரோசன மாத்திரை என்ற தலைப்பை யாரோ ஒருவர் போட்டோஷாப் மூலம் நீக்கிவிட்டு கோரோன மாத்திரை என பொய்யாக ஒரு படத்தை உருவாக்கி அதை சமூக வலைதளங்களில் உலவ விட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்