94 மருத்துவர்கள்.. 26 செவிலியர்கள் கொரோனா வைரஸால் மரணம்! மீளா துயரத்தில் இத்தாலிய மருத்துவர்கள் சங்கம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸால் 94 மருத்துவர்கள் இறந்துவிட்டதாக இத்தாலிய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வைரஸ் பாதிப்புக்கு பின்னர் 26 செவிலியர்களும் இறந்துள்ளனர், மொத்தம் 6,549 செவிலியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இத்தாலிய செவிலியர்கள் கூட்டமைப்பின் அதிகாரி கூறினார்.

திங்களன்று நிலவரப்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மொத்த சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை 12,681 என்று இத்தாலிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது சுகாதார வசதிகளுக்குள் தொற்றுநோய் பரவலுக்கு முக்கிய காரணமாகியுள்ளது.

ஐரோப்பாவின் சில சிறந்த சுகாதார கட்டமைப்புகள் வடக்கு இத்தாலியில் உள்ளன, ஆனால் அவை அவசர சிகிச்சை தேவைப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையால் சரிவுக்கு தள்ளப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனாவல் இத்தாலியில் தான் கொரோனாவுக்கு அதிக பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை அந்நாட்டில் சுமார் 16,523 பலியாகியுள்ளனர், 1,32,547 பேருக்கு தொற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்