தன்னை ஏமாற்றிய காதலனை வித்தியாசமாக பழிவாங்கிய இளம் பெண்! கமெராவில் சிக்கிய காட்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் காதலன் பிரிந்து சென்ற பின், அவன் அழாமல் சந்தோஷமாக இருந்ததால், காதலி அவர் அழ வேண்டும், பழிவாங்க வேண்டும் என்பதற்காக அவரின் வீட்டிற்கு டன் கணக்கில் வெங்காய மூட்டைகளை வாங்கிய அனுப்பிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

கிழக்கு சீனாவின் Zibo-வில் இருக்கும் குடியிருப்பு வளாகத்தின் முன்பு காய்கறிகளை ஏற்றி வரும் டிரக் ஒன்று நிற்கிறது. அந்த டிரக் முழுவதும் வெங்காயம் உள்ளது.

அந்த வெங்காயத்தை அனுப்பிய நபர், குறித்த முகவரியில் இருக்கும் நபரை தொடர்பு கொள்ள வேண்டாம், வெங்காயத்தை மட்டுமே போட்டுவரும் படி குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் அந்த வேனில் இருந்த ஊழியர் சுமார் நான்கு மணி நேரம், குறித்த நபரின் வீட்டின் முன்பு சுமார் டன் கணக்கில் கொண்ட வெங்காயத்தை இறக்கி வைத்துள்ளார்.

இதற்கு காரணம் காதல், தான் தன்னை ஏமாற்றிவிட்டு, பிரிந்து சென்ற காதலன் அழ வேண்டும், குறித்த பெண் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேலாக அழுதுள்ளார்.

ஆனால் காதலனோ மகிழ்ச்சியாக அழாமல் இருப்பதாக நண்பர்கள் மூலம் தெரியவர, அவர் இப்படி ஒரு வித்தியாசமாக யோசித்துள்ளார்.

அதில் நான் மூன்று நாட்கள் அழுதுவிட்டேன், இனி உன்னுடைய நேரம் வந்துவிட்டது என்பது போல் அனுப்பியுள்ளார்.

அதற்கு அந்த காதலன் அழவில்லை என்றால் காதல் இல்லை என்று அர்த்தமா? வெறுமேன அழுகாமல் இருப்பதால் நான் கெட்டவனா என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்