ஏமாற்றிய முன்னாள் காதலனை பழி வாங்க இளம்பெண் செய்த வித்தியாசமான செயல்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

தன்னை ஏமாற்றிய தன் முன்னாள் காதலன் தன்னைப்போலவே அழவேண்டும் என்பதற்காக அவர் வீட்டுக்கு 1000 கிலோ வெங்காயத்தை அனுப்பி வைத்தார் ஒரு இளம்பெண்.

Zhao என்னும் அந்த சீனப்பெண்ணை கைவிட்டுவிட்டார் அவரது காதலர். தான் தன் காதலரைப் பிரிந்தபோது மூன்று நாட்களாக கண்ணீர் விட்ட நிலையில், அவர் அழவே இல்லை என்பது தெரியவர, Zhaoக்கு கடும் கோபம் ஏற்பட்டது.

ஆகவே, 1000 கிலோ வெங்காயத்தை ஆர்டர் செய்து தன் முன்னாள் காதலர் வீட்டுக்கு அனுப்பிவைத்தார் அவர்.

அதில் ஒரு கடிதத்தையும் சேர்த்திருந்தார் அவர். அந்த கடிதத்தில், நான் மூன்று நாட்கள் அழுதேன், இப்போது உன்னுடைய முறை என்று எழுதப்பட்டிருந்தது.

Zhaoவின் காதலர் வெங்காயத்தைப் பார்த்து திகைத்துப்போய் நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அத்துடன் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், 1000 கிலோ வெங்காயத்தை Zhaoவின் முன்னாள் காதலன் வீட்டுக்கு ட்ரக் ஒன்று டெலிவரி செய்வதையும் காணமுடிகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்