2 குழந்தைகள், கணவன் என குடும்பத்தை விட்டு வெளிநாட்டிற்கு பறந்த இளம் மனைவி! என்ன காரணம்? குவியும் பாராட்டு

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஐக்கியர் அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கு எதிரான போரில், கேரளாவை சேர்ந்த 105 மருத்துவர்கள் தரையிரங்கிய நிலையில், அதில் பெண் ஒருவர் தன் கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு சென்றுள்ளது பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

கொரோனாவின் பாதிப்பு இப்போது மெல்ல மெல்ல குறைந்து வந்தாலும், ஒரு சில நாடுகளில் அதன் பாதிப்பு தீவிரமாகி வருகிறது என்றே கூறலாம்.

குறிப்பாக இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தையும், ரஷ்யாவில் 3 லட்சத்தையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

இதனால் இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கும், இனி இது பரவாமல் இருப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்று, ஆரம்பத்தில் இங்கு கொரோனாவின் பாதிப்பு இல்லை என்றாலும், தற்போது இங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25-ஆயிரத்தை தாண்டியும், 220-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக கொரோனாவிற்கு எதிராக போராடி வரும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு, இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்து 105 மருத்துவ ஊழியர்கள் சென்றுள்ளனர். அவர்கள் இன்று அங்கு தரையிரங்கியுள்ளனர்.

Reenu Augustine குடும்பத்தினருடன்(khaleejtimes)

இதில் குறித்த மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த Reenu Augustine என்ற பெண் இந்த மருத்துவ பணியில் இணைந்துள்ளார்.

இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதில் ஒரு குழந்தை பிறந்து நான்கு மாதமே ஆகிறது. இது குறித்து அவரிடம் பிரபல ஆங்கில ஊடகம் கேட்ட போது, வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிரைக் காப்பாற்றுவது மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார்.

மேலும், அவர் என் குழந்தையை என் கணவர் மற்றும் பெற்றோருடன் விட்டுச் செல்வது என் இதயத்தை உடைப்பது போன்று தான் உள்ளது.

ஆனால் இந்த உலகத்திற்கு என்னுடைய சேவை மிகவும் தேவைப்படும் நேரம் இது என்று நான் நினைக்கிறேன்.

இதனால் நான் என்னுடைய மகிழ்ச்சியை தியாகம் செய்கிறேன்.

இது எளிதான முடிவு இல்லை, நான் பாதிக்கப்படுவேனோ என்று என் குடும்பத்தினர் மிகவும் கவலையாக இருந்தனர். நான் மருத்துவமனைகளில் இருக்கும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அவர்களுக்கு எடுத்து கூறி, சம்மதம் வாங்குவதற்கு அதிக நேரம் பிடித்தது.

Photo: Reenu Augustine(khaleejtimes)

இதே போன்று முன்னணி மருத்துவ ஊழியர்கள் நினைத்திருந்தால், உலகின் நிலை என்னவாக இருந்திருக்கும்?

இந்த துன்ப காலத்தில் எங்கள் சேவைகள் விலைமதிப்பற்றவை மற்றும் இன்றியமையாதவை என்பதை நாங்கள் அறிவோம்.

பாதுகாப்பிற்காக திரும்புவதற்கு இது நேரமல்ல. இது பாதுகாக்கும் நேரம் உலகெங்கிலும் உள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்களும், இது போன்ற நாளுக்காக காத்திருக்கிறார்கள்.

அவர்கள் அதைப் பற்றி கனவு காண்கிறார்கள். அது வெகு தொலைவில் இல்லை என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த முடிவிற்கு சமூகவலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்