கொரோனாவை கட்டுப்படுத்தியதில் வெற்றி..! பிரித்தானியாவிற்குள் எங்களை அனுமதிக்க வேண்டும்! அவுஸ்திரேலியா முக்கிய கோரிக்கை

Report Print Basu in ஏனைய நாடுகள்

பிரித்தானியாவின் தனிமைப்படும் விதிகளில் இருந்து தங்கள் பயணிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அவஸ்திரேலியா கோரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானியாவுக்கு வருகை தரும் அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் கட்டாய இரண்டு வார தனிமைப்படுத்தல் என்ற கொள்கையிலிருந்து தங்கள் பயணிகளுக்கு விலக்கு அளிக்குமாறு என அவுஸ்திரேலியா கோரியுள்ளது.

அவுஸ்திரேலியா கொரோனாவை பெரும்பாலும் கட்டுப்படுத்தியுள்ளதால் பிரித்தானியாவிடம் இக்கோரிக்கை முன்வைத்துள்ளது. தற்போது அவுஸ்திரேலியாவில் 600க்கும் மேற்பட்ட கொரோனா வழக்குகளே உள்ளன, சராசரியாக ஒரு நாளைக்கு 12 புதிய வழக்குகள் மட்டுமே உள்ளன.

கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதில் அவுஸ்திரேலியா உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. அவுஸ்திரேலியாவிலிருந்து வரும் பயணிகளால் உலகின் பிற பகுதிகளுக்கு கொரோனா பரவ குறைவான வாய்ப்பே உள்ளது என்று அந்நாட்டின் வர்த்தக அமைச்சர் சைமன் பர்மிங்காம் கூறினார்.

பெப்ரவரியில் எல்லைகளை மூடிய முதல் நாடுகளில் அவுஸ்திரேலியாவும் ஒன்றாகும், மார்ச் மாதத்தில் நாட்டிற்கு திரும்பி வரும் பயணிகளுக்கு கட்டாயமாக 14 நாள் தனிமைப்படுத்தலை விதித்த பின்னர் அதன் தொற்று வீதம் எதிர்பாராத அளவில் குறைந்தது.

பள்ளி, உணவகங்கள் மற்றும் சில்லறை கடைகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டு இயங்குவதால் நாடு இப்போது மீண்டும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

ஏறக்குறைய எட்டு மில்லியன் அவுஸ்திரேலிய குடியிருப்பாளர்கள் பிரித்தானியா வம்சாவளியைக் கொண்டுள்ளனர், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7,00,000 அவுஸ்திரேலியர்கள் பிரித்தானியாவுக்கு பயணிக்கிறார்கள். இதே அளவிலான பிரித்தானியார்களும் அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்