உடையால் சர்ச்சைக்குள்ளான செவிலியர் இவர்தான்: சர்ச்சையால் ஏற்பட்டுள்ள நன்மை!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
350Shares

உள்ளாடை தெரியும் விதத்தில் பாதுகாப்பு உடை அணிந்து பணி செய்ததால் பரபரப்பை ஏற்படுத்திய செவிலியரின் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில், அவரது சர்ச்சையால் அவருக்கு ஒரு நன்மையும் ஏற்பட்டுள்ளது.

ரஷ்ய மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிபவர் Nadia (23). அவர் பாதுகாப்பு உடைக்குள் உள்ளாடை மட்டுமே அணிந்து பணிக்கு வர, அந்த

பாதுகாப்பு உடை கண்ணாடி போல் இருந்ததால், அப்பட்டமாக அவரது உள்ளாடை வெளியே தெரிந்தது.

இந்த கோலத்தை ஆண் கொரோனா நோயாளி ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். அவர் எடுத்த இரண்டு படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக, அவர் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

ஆனால், அவரது சக செவிலியர்களூம் மருத்துவர்களும் Nadiaவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

இந்நிலையில், பிரபல உள்ளாடை நிறுவனமான Miss X lingerie என்ற நிறுவனத்தின் தலைவரான Anastasia Yakusheva, செவிலியர் Nadia எங்கள் நிறுவன மொடலாக வேண்டும் என்று விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

அவருக்காக பல புதிய தயாரிப்புகளை உருவாக்க விரும்புகிறோம் என்று கூறியுள்ள அவர், எதிர் காலத்தில் வருடாந்திர ஒப்பந்தம் ஒன்றையும் அவருடன் செய்துகொள்ள விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்